Aran Sei

லக்கிம்பூர் வன்முறை: அஜய் மிஸ்ராவை கைது செய்யக் கோரி விவசாயிகள் ரயில் மறியல்- முடங்கிய பஞ்சாப், ஹரியானா

க்கிம்பூர் வன்முறை தொடர்பாக, ஒன்றிய அமைச்சர் அஜய் மிஷ்ராவை கைது செய்யக் கோரி, சம்யுக்த் கிசான் மோர்ச்சா நடத்தியுள்ள ஆறு மணி நேர ரயில் மறியல் போராட்டத்தால், பஞ்சாப் மற்றும் ஹரியானா ரயில் தண்டவாளங்களை விவசாயிகள் கைப்பற்றியுள்ளனர். இதனால் ரயில் சேவைகள் முடங்கியுள்ளன.

இருப்பினும், உத்தர பிரதேசம் மாநிலத்தில் பெரிய அளவிலான ரயில் மறியல் போராட்டம் நடைபெறவில்லை.

போராடும் விவசாயிகள் சஹ்னேவால் மற்றும் ராஜ்புரா அருகே ரயில் தண்டவாளங்களை மறித்ததால், புதுடெல்லி-அமிர்தசரஸ் இடையிலான சதாப்தி எக்ஸ்பிரஸ் சம்பு ஸ்டேஷன் அருகே நிறுத்தப்பட்டுள்ளது. மற்ற ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

லக்கிம்பூர் வன்முறை : ஒன்றிய இணைஅமைச்சர் அஜய் மிஸ்ராவை கைது செய்யக் கோரி ரயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 

இதுதொடர்பாக, வடக்கு ரயில்வே சிபிஆர்ஓ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதுவரை, வடக்கு ரயில்வே மண்டலத்தில் 150 இடங்களில் உள்ள விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் செய்து வருகிறார்கள். 60 ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சுமார் 25 பயணிகள் ரயில்கள் மற்றும் குறுகிய தூர ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மற்றும் மத்திய உத்தரபிரதேச பகுதிகளில் ரயில் மறியல் போராட்டம் மந்தமாகவே நடைபெற்றுள்ளது. ஆனால், மேற்கு உ.பி.யில் ரயில் மறியல் போராட்டத்தில் தாக்கம் பரவலாக இருந்துள்ளது. பல்வேறு இடங்களில் விவசாயிகள் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Source: New Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்