Aran Sei

பழங்குடி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு : குற்றம்சாட்டப்பட்டவருக்கு காவல் நீட்டிப்பு

Image Credits: DW

காராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் பென் என்ற இடத்தில் மூன்று வயது பழங்குடி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை அலிபாக் செஷன்ஸ் நீதிமன்றம் காவலில் வைத்துள்ளது என்று தி இந்து இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

34 வயதான ஆதேஷ் பாட்டீல் எனும் நபர் பென்னில் உள்ள வாட்கான் கிராமத்தில் 3 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிக் கொலை செய்ததாக 2020-ம் டிசம்பர் 30 அன்று குற்றம்சாட்டப்பட்டது. முன்னதாக இந்த வழக்கில் அவருக்குப் பிணை கிடைத்தது.

சுருமியின் பாட்டி அவளை கண்டுபிடித்து ஒரு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். அங்கு முன்னதாகவே சிறுமியின் உயிர் பிரிந்துவிட்டது என்று கூறப்பட்டுள்ளது.

வன்கொடுமை வழக்கை விசாரிக்கவில்லையென குற்றச்ச்சாட்டு : ஹத்ராஸ் மாவட்ட நீதிபதி பணியிட மாற்றம்

நீதிமன்றத்தில், ஆதேஷ் பாட்டீல் தரப்பில் எந்தவொரு வழக்கறிஞரும் ஆஜராகவில்லை. இதனை அடுத்து அவர் ஜனவரி 8-ம் தேதி வரை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட ஆதேஷ் பாட்டீல் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் (பிஓசிஎஸ்ஓ), வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வாரத் தொடக்கத்தில் இவ்வழக்கில் புகழ்பெற்ற வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் சிறப்பு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் பரவலாக அதிர்ச்சியை ஏற்படுத்தியது, அதை தொடர்ந்து உள்ளூர்வாசிகள் பென் நகரில் பந்த் ஒன்றுக்கு அழைப்பு விடுத்தனர்.

ஆதேஷ் பாட்டீல் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் 10 நாட்களுக்கு முன்பு தான் அவர் வேறொரு பாலியல் வழக்கில் பிணை பெற்றுள்ளார் என்றும் ட்ரிப்யூன் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்