வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டபேரவை உறுப்பினருமான சி.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடந்து வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். இவர்மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, நேற்று(அக்டோபர் 17), புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட 29 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதோடு, விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட 43 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
சி.விஜயபாஸ்கர் மீது பதியப்பட்ட வழக்கோடு, அவரின் மனைவி ரம்யா மீதும் வருமான வரித்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதற்கு முன்னர், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி. வீரமணி, ராஜேந்திர பாலாஜி மீதும் சொத்துக் குவிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.