Aran Sei

ஜனநாயகத்தின் எல்லா தூண்களையும் பாஜக கைப்பற்ற நினைக்கிறது – ராகுல்காந்தி

Image Credits: National Herald

னநாயகத்தின் எல்லா தூண்களையும் ஒரு அரசியல் கட்சி கைப்பற்றிவிட்டால் அங்குத் தேர்தல் என்பதே பொருளற்றதாகிவிடும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் பிரவுன் பல்கலைகழகத்திற்கு அவர் ஆற்றிய இணையவழி உரையாடலின்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘ஆர்எஸ்எஸ்-ன் சர்வாதிகாரத்தை எதிர்த்து சுதந்திரத்துக்கான அணிவகுப்பை தொடருவோம்’ – ராகுல் காந்தி

பிரவுன் பல்கலைகழகத்தின் இணையவழி உரையாடலின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி , பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்வும் ஜனநாயகத்தின் எல்லா தூண்களையும் கைபற்றிவிட்டதாகவும், குறிப்பாக ஊடகத்தையும், நீதித்துறையையும் கைபற்றிவிட்டது என்று தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

மேலும், நாடாளுமன்றத்தின் வேலை மக்கள் பிரதிநிதிகளின் குரலைக் கேட்பதுதான். ஆனால் நாடாளுமன்றத்தில் தான் பேச எழுந்தால் ஒலிவாங்கி(mic)  அணைத்து வைக்கப்படுகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாடியுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இந்தியா இனிமேலும் ஜனநாயக நாடாக இல்லை ” – ராகுல் காந்தி

அந்த இணையவழி உரையாடலின் போது பேசிய ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் மோடிக்கு ஆதரவாக உரையாற்றாதவர்கள்
வெளியேற்றப்படுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஜனநாயகம் நலிவடைந்திருகிறதா என இணையவழி உரையாடலின்போது கேட்கப்பட்ட கேள்விக்கு ,” இந்தியாவில் ஜனநாயகம் நலிவடைதிருப்பதாகவும், ஜனநாயகத்தின் தூண்கள் வலுவிழந்தால் ஜனநாயகமும் நலிவடையும்” என்று ராகுல் காந்தி பதிலளித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

389 மலக்குழி மரணங்கள்: நம்முடைய மனசாட்சி நம்மை கொல்லாதிருக்க நடவடிக்கை எடுப்போம் – ராகுல் காந்தி

வேளாண் சட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது , ” வேளாண் சட்டம் விவசாயிகளுக்கு எதிரான வன்முறை ” என்று ராகுல் காந்தி பதிலளித்து உள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும் காடபியும் சதாம் ஹுசைனும் வாக்களிக்க அனுமதித்தார்கள். ஆனால், இன்று அதைவிட மோசமாக நாடாளுமன்ற உரிமைகள் மறுக்கப்படுகிறது என்று அந்த இணையவழி உரையாடலின்போது ராகுல் குறிப்பிட்டுள்ளதாகவும்  அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்