Aran Sei

‘வேளாண் சட்டங்கள் தொழிலதிபர்களுக்கு ஆதரவானது’ – விவசாயிகளுக்கு ஆதரவாக டிராக்டரில் நாடாளுமன்றம் வந்த ராகுல் காந்தி

ன்றிய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களும்  இரண்டு அல்லது மூன்று  பெரும் தொழிலதிபர்களுக்கு ஆதரவாகக் கொண்டுவரப்பட்டுள்ளது  என்பது நாட்டில் உள்ள அனைவருக்கும்  தெரியும்  என்று  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளதாக  தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்  செய்தி  வெளியிட்டுள்ளது.

திருமணமத்திற்காக பெண்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணையிக்க வேண்டும் – பிரதமருக்கு பெண்கள் அமைப்பினர் வேண்டுகோள்

மேலும், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் , மூன்று வேளாண் சட்டங்களுக்கு  எதிர்ப்பு  தெரிவிக்கும் வகையிலும்   அவர் டிராக்டரில் பயணித்து  நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ளதாகவும்  அந்தச் செய்தியில்  கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்திற்கு வெளியே பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த  ராகுல் காந்தி, “நான் விவசாயிகளின் செய்தியை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.  இந்த அரசாங்கம் விவசாயிகளின் குரலை ஒடுக்குகிறது. அவர்களது  கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் பேச மறுக்கிறது. அரசு இந்த கறுப்புச் சட்டங்களை திரும்பப் பெற  வேண்டும். ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள சட்டங்கள்  இரண்டு அல்லது மூன்று   பெரும் தொழிலதிபர்களுக்கு ஆதரவாகக் கொண்டுவரப்பட்டுள்ளது  என்பது நாட்டில் உள்ள அனைவருக்குமே   தெரியும்” என்று கூறியுள்ளதாகவும்   தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்  செய்தியில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

147 கோடியை விளம்பர நிறுவனங்களுக்கு நிலுவையில் வைத்துள்ள ஒன்றிய அரசு – தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வெளியான உண்மை

இதே வேளையில், பெகசிஸ் ஸ்பைவேர் வழியாகத் தொலைபேசிகள் கண்காணிக்கப்பட்டது தொடர்பாக  நாடாளுமன்ற மாநிலங்களவையில்  எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தி  கூறுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்