நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கவலை தெரிவித்துள்ளார். மேலும், ஒன்றிய அரசானது விற்பனையில் மும்முரமாக இருப்பதால் மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த 70 ஆண்டுகளால், கட்டமைக்கப்பட்ட நாட்டின் சொத்துக்களை பாஜக அரசு விற்றுவிட்டதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, இன்று (ஆகஸ்ட் 26), தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், “அதிகரித்து வரும் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை கவலை அளிக்கிறது. அடுத்த கொரோனா அலையின் மோசமான விளைவுகளைத் தடுக்க தடுப்பு மருந்து செலுத்து பணியை வேகப்படுத்த வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.
Rising #COVID numbers are worrying. Vaccination must pick up pace to avoid serious outcomes in the next wave.
Please take care of yourselves because GOI is busy with sales.
— Rahul Gandhi (@RahulGandhi) August 26, 2021
“தயவுசெய்து உங்களை கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் இந்திய அரசு விற்பனை செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.” என்று ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் புதிதாக 46,164 கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளது.
தொடர்புடைய பதிவுகள்: தனியார் மயமாகிறதா எல்ஐசி? – நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்க பரிசீலிக்கும் ஒன்றிய அரசு
70 ஆண்டுகால இந்தியாவின் பொக்கிஷங்களை மோடி அரசு விற்கிறது – ராகுல் காந்தி கண்டனம்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.