மோடி ஜி, எங்கள் குழந்தைகளின் தடுப்பு மருந்துகளை ஏன் வெளிநாடுகளுக்கு அனுப்பினீர்கள் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில், டெல்லியின் பல பகுதிகளில், “மோடி ஜி ஹமாரே பச்சோன் கி வாக்சின் விதேஷ் க்யோன் பேஜ் தியா? (மோடி ஜி, எங்கள் குழந்தைகளின் தடுப்பு மருந்துகளை ஏன் வெளிநாடுகளுக்கு அனுப்பினீர்கள்?)” என்று எழுதப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
இதனையடுத்து, சுவரோட்டிகள் ஒட்டிய ஒன்பது பேரை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இது தொடர்பாக, பத்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
கொரோனா தடுப்பூசி தொடர்பாக மோடியை விமர்சிக்கும் சுவரோட்டிகள் – 9 பேரை கைது செய்த டெல்லி காவல்துறை
இந்நிலையில், இதுதொடர்பாக, இன்று (மே 16), ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், “மோடி ஜி, எங்கள் குழந்தைகளின் தடுப்பு மருந்துகளை ஏன் வெளிநாடுகளுக்கு அனுப்பினீர்கள்?” என்ற வாசகம் எழுதப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
Arrest me too.
मुझे भी गिरफ़्तार करो। pic.twitter.com/eZWp2NYysZ
— Rahul Gandhi (@RahulGandhi) May 16, 2021
மேலும், என்னைக் கைது செய்யுங்கள் என்று அவர் டிவீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
தன் டிவிட்டர் பக்கத்தின் முகப்பு படமாகவும் அவ்வாசகத்தை ராகுல் காந்தி மாற்றியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.