Aran Sei

இந்துத்துவ அமைப்புகளை ஒன்றிணைந்து எதிர்கொள்வோம் – ராகுல் காந்தி

ந்துத்துவ அமைப்புகளை ஒன்றிணைந்து எதிர்கொள்வோம் என்று விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

எனது ஆட்சியில் வளர்ச்சியைவிட வேலைவாய்ப்புகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும் – ராகுல் காந்தி

கடந்த நவம்பர் மாதத்திலிருந்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தை விவசாயிகள் சங்கம் ஒருங்கிணைத்து வருகிறது.

ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் அமைப்புகளை, இனி சங் பரிவார் என அழைக்கப்போவதில்லை – ராகுல் காந்தி விளக்கம்

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்துக்குக் காரில் சென்று கொண்டிருந்த விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ராகேஷ் திகைத்தின் காரை ஏபிவிபி இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் கற்களைக் கொண்டு தாக்கியுள்ளனர்.

இந்தச் சம்பவம்குறித்து ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் “தாக்குதல் நடத்துவது குறித்து இந்துத்துவ அமைப்பு ஏபிவிபி அமைப்புக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது. அவர்களைப் போல் அல்லாமல் அமைதிவழியில் போராடுவது விவசாயிகளை அச்சமற்றதாக்கும். நாம் ஒன்றிணைத்து இந்துத்துவ அமைப்பை எதிர்கொள்வோம், மூன்று வேளாண் சட்டங்களும், இந்தத் தேசத்திற்கு எதிரான சட்டங்களும் திரும்பப் பெறப்படும் வரை போராடுவோம் ” என தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்