Aran Sei

என்னால் நிம்மதியாக தூங்க முடியும், எடப்பாடி பழனிசாமியால் முடியுமா? – ராகுல் காந்தி கேள்வி

னக்கு பிரதமர் மோடியை நினைத்து பயமில்லை என்பதால், நான் இரவில் படுக்கையில் படுத்தால் 30 வினாடிகளில் தூங்கிவிடுவேன் என்றும் ஆனால், ஊழல் படிந்த தமிழக முதல்வரான எடப்பாடி பழனிசாமியால் இரவில் தூங்க முடியாது என்றும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இன்று (பிப்பிரவரி 28) தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு இரண்டு நாட்கள் தேர்தல் பிரச்சார பயணமாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வருகை வந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ராகுல் காந்தி, அதைத்தொடர்ந்து திருநெல்வேலியில் உள்ள புனித சேவியர் கல்லூரியில் பேராசிரியர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது, “ஆங்கிலேயர் எனும் மிகப்பெரிய எதிரியை நாம் வீழ்த்திவிட்டோம். மோடியை விட ஆங்கிலேயர்கள் மிகவலிமையானவர்கள். அவர்களையே மக்கள் தோற்கடித்துவிட்டார்கள். இப்போது இந்த புதிய எதிரி வந்துள்ளார். அங்கிலேயர்களை அனுப்பிய அதே வழியில் மக்கள் நரேந்திர மோடியை நாக்பூருக்கு (ஆர்எஸ்எஸ் தலைமையிடம்) அனுப்புவார்கள்.” என்று அவர் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடி மைதானத்தில் ரிலையன்ஸ், அதானி முனைகள் – ராகுல் காந்தியின் ’நாம் இருவர், நமக்கு இருவர்’ கிண்டல்

இந்துத்துவம் பற்றி பேராசிரியர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த  ராகுல் காந்தி, “பல்வேறு விஷயங்களில் இந்துத்துவத்துக்கு பிரதிநிதியாக மத்தியில் ஆளும் பாஜக அரசு தன்னை நினைத்துக்கொள்கிறது. ஆனால், உண்மையில், இந்துத்துவம் மீது எந்தவிதமான நம்பிக்கையும் இல்லை. புண்படுத்துதல், கொலை செய்தல், மக்களை தாக்குதல் போன்றவற்றை இந்துமதம் போதிக்கவில்லை. ஆனால், அதை அவர்கள் செய்கிறார்கள்.” என்று ராகுல் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“அனைத்து மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன. ஆனால், மத்தியில் ஆளும் அரசின் மொத்த விளையாட்டும் சாமானிய மக்களிடம் இருந்து பணத்தை திருடுவதுதான். வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து பணத்தை திருடி, பெரிய தொழிலதிபர்களுக்குக் கொடுக்கிறது.” என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

மேலும், “நம்முடைய கல்வி முறை என்பது நமது ஆசிரியர்களால், நமது மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. கல்வி முறையில் ஏதாவது ஒரு கொள்கையைச் சேர்க்க வேண்டுமென்றால், அதற்கு முன்னதாக மாணவர்களிடமும், ஆசிரியர்கள், பேராசிரியர்களிடமும் ஆலோசனைகளையும், கருத்துகளையும் கேட்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, தேசிய கல்விக்கொள்கை, ஆசிரியர்கள், மாணவர்கள் கருத்துகளைக் கேட்காமல் கொண்டுவரப்பட்டுள்ளது.” என்று ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.

‘பாஜக ஆட்சியில் தமிழ் பேசக்கூடாது; அரசை விமர்சித்தால் தேசவிரோதி பட்டம்’ – ராகுல் காந்தி கண்டனம்

அதைத் தொடர்ந்து, பொது மக்கள் கலந்துக்கொண்ட கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “எனக்கு பிரதமர் மோடியை நினைத்து பயமில்லை. நான் இரவில் படுக்கையில் படுத்தால் 30 வினாடிகளில் தூங்கிவிடுவேன். ஆனால், தமிழக முதல்வர் தூங்குவாரா, அவருக்கு எவ்வளவு நேரமாகும். ஊழல் படிந்த தமிழக முதல்வரால் இரவில் தூங்க முடியாது, அவர் நேர்மையானவர் இல்லை.” என்று கூறியுள்ளார்.

 

என் தந்தையை கொன்றவர்களை நான் மன்னித்துவிட்டேன் – ராகுல் காந்தி

“பிரதமர் மோடி, தமிழகத்தைத் தனது தொலைக்காட்சி போல் நினைக்கிறார். ரிமோட் கன்ட்ரோலை எடுத்து, தனக்கு என்ன விருப்பமோ அதைச் செய்கிறார். ரிமோட் மூலம்தான் மத்திய அரசு தமிழகத்தைக் கட்டுப்படுத்துகிறது. தேவைப்பட்டால் தொலைக்காட்சி ஒலியைக் கூட்டுகிறார், குறைக்கிறார். அதற்கு ஏற்றாற்போல் தமிழக முதல்வர் உரக்கப் பேசுவார், மெதுவாகவும் பேசுவார். தமிழக மக்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று பிரதமர் மோடி நினைக்கிறார். ஆனால், மக்கள் ரிமோட்டிலிருந்து பேட்டரியை எடுக்கப்போகிறார்கள், அவர்களைத் தூக்கி எறியப்போகிறார்கள்.” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்