மோடியின் கோழைத்தன அரசிற்கு, 3-4 தொழிலதிபர் நண்பர்கள் மட்டுமே கடவுளாக உள்ளனர் என்று பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
அண்மையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் சார்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் உள்ள கூறுகளை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார்.
மத்திய பட்ஜெட் 2021: இந்தியாவின் சொத்துக்கள் முதலாளிகளிடம் விற்கப்பட இருக்கிறது – ராகுல் காந்தி
தனது ட்விட்டர் பக்கத்தில், “மக்களின் கைகளுக்குப் பணத்தை கொண்டு செல்ல மறந்த மோடி அரசாங்கம் இந்தியாவின் சொத்துக்களை தன்னுடைய முதலாளித்துவ நண்பர்களுக்கு விற்க திட்டமிட்டிருக்கிறது.” என்றும் “பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையேற்றப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் மோடி அரசு நாட்டின் மற்றும் வீடுகளின் வரவு செலவுத் திட்டத்தைச் சீர்குலைத்துவிட்டது.” என்றும் பட்ஜெட் தொடர்பாக மத்திய அரசை விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில், இன்று (பிப்பிரவரி 8) தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ள ராகுல் காந்தி, “பட்ஜெட்டில் இந்திய ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியம் குறைக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்ஜெட்டில் இளைஞர்களுக்கோ விவசாயிகளுக்கோ ஏதுமில்லை. மோடியின் அரசிற்கு 3-4 தொழிலதிபர் நண்பர்கள் மட்டுமே கடவுளாக உள்ளனர்.” என்று விமர்சித்துள்ளார்.
बजट में सैनिकों की पेंशन में कटौती।
ना जवान ना किसान
मोदी सरकार के लिए
3-4 उद्योगपति मित्र ही भगवान!— Rahul Gandhi (@RahulGandhi) February 8, 2021
மற்றொரு ட்வீட்டில், இந்த ஆண்டு பட்ஜெட் உரையை வாசிக்கையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் என்ற வார்த்தையையும் ஆறு முறையும் கார்ப்பரேட்டுகள், நிறுவனங்கள் என்ற வார்த்தைகளை 17 முறை பயன்படுத்தியுள்ளார் என்றும் பாதுகாப்பு மற்றும் சீனா என்ற வார்த்தையை ஒருமுறைக் கூடக் குறிப்பிடவில்லை என்றும் சுட்டிக்காட்டும் அட்டவனைப் படத்தைப் பகிர்ந்துள்ளார்.
Cowardice runs very deep in GOI. pic.twitter.com/d1Y17FpPcK
— Rahul Gandhi (@RahulGandhi) February 7, 2021
மேலும் அதில், கோழைத்தனம் இந்திய அரசிற்கு அதிகமாகிவிட்டது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.