Aran Sei

நூறாவது நாளில் விவசாயிகள் போராட்டம்: ‘ராணுவ வீரர்களின் தந்தைகளுக்கு ஆணிக்கம்பளம் விரிக்கும் மத்திய அரசு’ – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ம் நாட்டு எல்லைகளில் உயிரைப் பணயம் வைத்து மக்களைப் பாதுகாப்பவர்களின் தந்தைகளுக்கு, டெல்லி எல்லைகளில் ஆணிக்கம்பளத்தை விரித்துள்ளனர் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களை நீக்கக் கோரி, டெல்லி எல்லைகளில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் இன்று (மார்ச் 6) 100 வது நாளை எட்டியுள்ள நிலையில், இன்றைய தினத்தைக் கருப்பு தினமாக கடைபிடிக்க விவசாயிகள் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

அதையொட்டி, குண்ட்லி-மானேசர்- பல்வால் ஆகியவற்றை இணைக்கும் கேஎம்பி அதிவிரவு நெடுஞ்சாலையை முடக்கவுள்ளதாகவும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டக்களத்தை விட்டுப் போகமாட்டோம் என்றும் விவசாயிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

நூறாவது நாளை எட்டிய விவசாயிகள் போராட்டம் – அதிவிரைவு நெடுஞ்சாலையை முடக்கும் விவசாயிகள்

இந்நிலையில், இன்று (மார்ச் 6) நூறாவது நாளை எட்டியுள்ள விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, நம் நாட்டு எல்லைகளில் உயிரைப் பணயம் வைத்து மக்களைப் பாதுகாப்பவர்களின் தந்தைகளுக்கு, டெல்லி எல்லைகளில் ஆணிக்கம்பளத்தை விரித்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், அன்னதாதாக்கள் (உணவளிப்பவர்கள்) தங்கள் உரிமைகளைக் கோருகிறார்கள் என்றும் ஆனால் அரசு அவர்களுக்கு எதிராக அட்டூழியங்களைச் செய்கிறது என்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் விமர்சித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்