ஒன்றிய அரசின் பூஜ்ஜியமான தடுப்பு மருந்து கொள்கை என்னும் கூர் கத்தி இந்திய மாதாவின் இதயத்தை குத்துகிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், கொரோனா ஊரடங்கிற்கு பிந்தைய காலத்தில், வேலையின்மை விகிதம் இரட்டை இலக்கத்தை எட்டியுல்லதாக கூறும் ஊடக செய்தியைப் பகிர்ந்து பிரதமர் மோடியை அவர் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக, இன்று (மே 23), ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், “மோடி அரசின் பூஜ்ஜிய தடுப்பூசி கொள்கையானது இந்திய மாதாவின் இதயத்தில் ஒரு கூர் கத்தி போல குத்தி நிற்கிறது என்பது துயர் தரும் உண்மை.” என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு டிவீட்டில், “ஒரு மனிதனும் அவனது ஆணவமும் + ஒரு தொற்று கிருமியும் அதன் உருமாறிய வகைகளும்” என்று குறிப்பிட்டு, நாட்டில் வேலையின்மை விகிதம் இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளதாக கூறும் செய்திக் குறிப்பை ஆமோதித்து, பகிர்ந்துள்ளார்.
One man and his arrogance
+
One virus and its mutants pic.twitter.com/mHeaG5Bg3X
— Rahul Gandhi (@RahulGandhi) May 31, 2021
அச்செய்திக் குறிப்பு, இந்த ஆண்டு மே மாதத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பிந்தைய காலத்தில், நாட்டில் வறுமையில் உள்ளோர் எண்ணிக்கை 97 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.