திரிபுராவில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (உபா) கீழ் வழக்குப்பதிவு செய்வதன் வழியாக உண்மையை மறைக்க முடியாது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் நடந்த வன்முறைக்கு எதிராக அக்டோபர் 26 அன்று, திரிபுராவில் உள்ள சாம்தில்லாவில் விஸ்வ இந்து பரிஷத் நடத்திய பேரணியின் போது ஒரு மசூதி தாக்கப்பட்டதுடன், இரண்டு கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. அருகிலுள்ள ரோவா பஜாரில் இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் மூன்று வீடுகளும் சில கடைகளும் சூறையாடப்பட்டதாக காவல்துறை தெரிவித்திருந்தது.
லக்கிம்பூர் வன்முறை: ‘காவல்துறையின் விசாரணை எதிர்பார்த்தபடி நடக்கவில்லை’- உச்ச நீதிமன்றம்
இவ்வன்முறை சம்பவம் குறித்து, பத்திரிகையாளர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் சமூக வலைதள பயனர்களும் தங்கள் கருத்துகளை பகிந்திருந்தனர்.
நேற்று முன் தினம்(நவம்பர் 6), திரிபுரா காவல்துறை 102 சமூக வலைதள பயனாளர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம், குற்றவியல் சதி போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது. மேலும், அந்த நபர்களின் அனைத்து விவரங்களையும் கேட்டுள்ள காவல்துறை, அவர்களின் கணக்குகளையும் முடக்குமாறு ட்விட்டர், பேஸ்புக் மற்றும் யூடியூப் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
வன்முறைகள் குறித்து புகார் அளித்ததற்காகவும், அது குறித்து எழுதியதற்காகவும், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், பத்திரிகையாளர்கள் உட்பட 102 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக திரிபுரா காவல்துறைக்கு இந்திய பத்திரிகையாசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
‘திரிபுரா எரிகிறது’ என்று ட்வீட் செய்ததற்காக பத்திரிகையாளர் ஷியாம் மீரா சிங் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அச்சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து, இன்று(நவம்பர் 8), தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, “திரிபுரா எரிகிறது என்று கூறுவதுதான் சரியான வார்த்தை பிரயேகமாக இருக்கும். ஆனால், பாஜகவுக்கு பிடித்த தந்திரம் என்ன என்றால், தூதரை சுட்டுக் கொல்வது. உண்மையை உபா சட்டத்தின் வழியாக மௌனிக்க வைக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
Source: New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.