இந்தியாவில் 47 லட்சம் கொரோனா இறப்புகள் நடந்ததாக கூறும் உலக சுகாதார அமைப்பின் அறிக்கையை சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “அறிவியல் பொய் சொல்லாது, பிரதமர் நரேந்திர மோடிதான் பொய் சொல்வார்” என்று விமர்சித்துள்ளார்.
மேலும், தங்களின் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு அரசு நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, இன்று (மே 6), தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்தில், “கொரோனா தொற்றுநோயால் 47 லட்சம் இந்தியர்கள் இறந்துள்ளனர். ஒன்றிய அரசு கூறுவது போல் 4.8 லட்சம் பேர் மட்டும் இறக்கவில்லை. அறிவியல் பொய் சொல்லாது. மோடிதான் சொல்வார்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
https://mobile.twitter.com/RahulGandhi/status/1522423132094558208
“அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு மதிப்பளிக்கவும். அவர்களுக்கு 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் கூறினார்.
நேற்று (மே 5), உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “உலகம் முழுவதிலும், 1.49 கோடி மக்கள் கொரோனா தொற்றால் நேரடியாகவோ அல்லது சுகாதார அமைப்புகள் மற்றும் சமூகத்தில் உருவான தொற்றுநோயின் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்தியாவில் 47 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது இந்திய அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ எண்ணிக்கையைவிட 10 மடங்கு கூடுதல், உலகளவிலான கொரோனா இறப்புகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு இதுவாகும்” என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாயன்மார்களே பல்லக்குள போகல உங்களுக்கு என்ன? | Surya Xavier Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.