Aran Sei

’கற்களை வீசுவதால், விவசாயிகளின் தைரியத்தை உடைத்துவிட முடியுமா?’ – ராகுல் காந்தி கேள்வி

காவல்துறையினரை நிறுத்தி அச்சுறுத்துவதன் வழியாகவும் கற்களை வீசுவதன் வழியாகவும் நீங்கள் விவசாயிகளின் தைரியத்தை உடைத்துவிட முடியுமா என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில்,“பிரதமர் நரேந்திர மோடி, நம்முடைய விவசாயிகளையும் தொழிலாளர்களையும் தாக்கி இந்தியாவைப் பலவீனப்படுத்துகிறார். இதனால் பயனடைவது தேசவிரோத சக்திகள் மட்டுமே.” என்று தெரிவித்துள்ளார்.

’ஆர்எஸ்எஸ்காரர்களை போராட்டத்திற்குள் அனுப்பி, மத்திய அரசு வன்முறையை தூண்டுகிறது’ – விவசாயிகள் குற்றச்சாட்டு

மற்றொரு ட்வீட்டில், “காசிப்பூரில் காவல்துறையினரை நிறுத்துவதன் வழியாகவும் சிங்கு எல்லையில் கற்களை வீசுவதன் வழியாகவும் நீங்கள் விவசாயிகளின் தைரியத்தை உடைத்துவிட முடியுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “இந்த முழு நாடும் அவர்களுடன் உடன் நிற்கிறது. நீங்கள் அவர்களை அச்சுறுத்த முடியாது.” என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

காசிப்பூர் – அரசின் மிரட்டலுக்கு அஞ்சாத விவசாயிகள், விலகும் போலீஸ்

இதுகுறித்து, உத்தரப்பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வரதா, தனது ட்விட்டர் பக்கத்தில், “விவசாயிகளின் நம்பிக்கையே இந்த நாட்டின் மூலதனம். அவர்களின் நம்பிக்கையை மீறுவது குற்றம். அவர்களின் குரலைக் கேட்காதது பாவம். அவர்களை அச்சுறுத்துவதும் பெரும் பாவம். விவசாயிகள்மீதான தாக்குதல் என்பது நாட்டின் மீதான தாக்குதல் ஆகும். பிரதமர் அவர்கள், நாட்டைப் பலவீனப்படுத்த வேண்டாம்.” என்று தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்