கடந்த மார்ச் 19 ஆம் தேதி, டெல்லியிலிருந்து, ஒடிஷா நோக்கிச் சென்ற கன்னியாஸ்திரிகளை மதம் மாற்றுவதாக குற்றஞ்சாட்டி அவர்களை ரயிலில் இருந்து பஜ்ரங் தளம் உறுப்பினரால் இறக்கி விடப்பட்டனர். இந்தச் சம்பவத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் ரயில் நிலையத்தில் ஏறிய பஜ்ரங் தளத்தின் உறுப்பினர்கள், கன்னியாஸ்த்ரிகளுடன் பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த இரண்டு பெண்களையும் கன்னியாஸ்த்ரிகள் வலுக்கட்டாயமாக கூட்டிச் சென்று மதமாற்றம் செய்வதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரானது.
அவர்களுடைய மிரட்டலால் கன்னியாஸ்த்ரிகள் ஜான்சி ரயில் நிலையத்தில் இறக்கப்பட்டு காவல்துறையால் ஐந்து மணி நேரத்திற்கும் மேல் விசாரிக்கப்பட்டுள்ளனர். பின்னர், அவர்கள் மதமாற்றத்தில் ஈடுபடவில்லை என்பது தெரிந்தத பின்னர், அவர்கள் வேறொரு ரயிலில் ஒடிஷாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்
இந்நிலையில், இதுதொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரிகள் மீது உத்தரபிரதேசத்தில் நடந்தப்பட்ட தாக்குதல் என்பது, ஒரு சமூகத்தை இன்னொரு சமூகத்திற்கு எதிராக நிறுத்தி, சிறுபான்மையினரை நசுக்கத் தூண்டும் சங்க பரிவாரின் கொடூர பிரச்சாரத்தின் விளைவாகும் என்று விமர்சித்துள்ளார்.
The attack in UP on nuns from Kerala is a result of the vicious propaganda run by the Sangh Parivar to pitch one community against another and trample the minorities.
Time for us as a nation to introspect and take corrective steps to defeat such divisive forces.
— Rahul Gandhi (@RahulGandhi) March 24, 2021
மேலும், இது போன்ற பிளவுண்டாக்கும் சக்திகளைத் தோற்கடிக்க, நாம் ஒரு தேசமாக இணைந்து, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் இது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.