Aran Sei

‘தற்போது இந்தியாவிற்கு தேவை தடுப்பு மருந்துகள்; பாஜகவின் பொய்களும் எதுகை மோனைகளும் அல்ல’ – ராகுல் காந்தி

ற்போது இந்தியாவிற்கு தேவை விரைவாக தடுப்பு மருந்துகள் செலுத்தப்படுவதுதான் அன்றி, பாஜகவின் வழக்கமான பொய்களும் எதுகை மோனையான முழக்கங்களும் அல்ல என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, இன்று (ஜூன் 16), தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி, “இந்தியாவுக்கு விரைவாகவும் முழுமையாகவும் தடுப்பு மருந்து செலுத்துவதே இப்போதைய  தேவை. மாறாக,  மோடி தலைமையிலான அரசாங்கத்தின் செயலற்ற தன்மையால் ஏற்பட்டுள்ள தடுப்பு மருந்து பற்றாக்குறையை மறைப்பதற்காக, பாஜகவின் வழக்கமான பொய்களும் எதுகை மோனையான முழக்கங்களும் அல்ல.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “பிரதமரின் போலியான பிம்பத்தைக் காப்பாற்ற இந்திய ஒன்றிய அரசு செய்துவரும் தொடர்ச்சியான முயற்சிகளால், கொரோனா தொற்றை குறைவாக மதிப்பிடப்படுவதோடு, மக்களின் உயிரையும் இழக்க வேண்டியிருக்கிறது.” என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்