Aran Sei

‘ஆர்எஸ்எஸ்-ன் சர்வாதிகாரத்தை எதிர்த்து சுதந்திரத்துக்கான அணிவகுப்பை தொடருவோம்’ – ராகுல் காந்தி

ர்எஸ்எஸ் தலைமையில் சர்வாதிகார சக்திகள் இந்தியாவை பிணைத்துக்கொண்டிருக்கிறது என்றும் அனைவருக்குமான சுதந்திரத்தை கருத்தில் கொண்டு, நமது தனிப்பட்ட கடமைகளைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பிரிட்டீஷ் ஆட்சியில் ஆங்கிலேயர்கள் விதித்த உப்பு வரியை நீக்கக் கோரி மகாத்மா காந்தி தண்டிக்கு நடைபயணம் மேற்கொண்டார். இந்த நிகழ்வு, தண்டி யாத்திரை என்று அழைக்கப்படுகிறது.

இதுதொடர்பாக, நேற்று (மார்ச் 12) மாலை, தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்த கருத்தில், “ஆர்எஸ்எஸ் தலைமையில் சர்வாதிகார சக்திகள் இந்தியாவை பிணைத்துக்கொண்டிருக்கிறது. அனைவருக்குமான சுதந்திரத்தை கருத்தில் கொண்டு, நமது தனிப்பட்ட கடமைகளைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். காந்திஜியின் முன்மாதிரி போராட்டத்தால் நாம் வழிநடத்தப்பட்டு, சுதந்திரத்துக்கான அணிவகுப்பை தொடருவோம். ஜெய் ஹிந்த்!” என்று கூறியுள்ளார்.

‘வெறுப்பின் உருவம்’ – ஆர்எஸ்எஸ் மீதான தடையும், சர்தார் வல்லபாய் பட்டேலும்

ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “மாணவர்கள் தங்களுக்கு வேலைவாய்ப்பு வேண்டும் என்கின்றனர். ஆனால் அவர்களுக்குக் காவல்துறையின் தடியடி, தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டுவது, தேசவிரோத முத்திரை, வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றையே மத்திய அரசு வழங்குகிறது.” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்