Aran Sei

‘பிரதமரின் தோல்வியும் ஒன்றிய அரசின் செயலின்மையும் நாட்டை பொதுமுடக்கத்தை நோக்கித் தள்ளுகிறது’ – ராகுல் காந்தி குற்றஞ்சாட்டு

பிரதமரின் தோல்வியும், உரிய திட்டங்களை வகுக்காத ஒன்றிய அரசின் செயலின்மையும் நம் நாட்டை மீண்டும் ஒரு முழு பொதுமுடக்கத்தை நோக்கித் தள்ளுகின்றன என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, தனது டிவிட்டர் பக்கத்தில், “கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டமிடப்படாத பொதுமுடக்கமானது மக்களின் உயிரை பறிக்கும் தாக்குதலாகும். அதன் காரணமாகவே, நான் முழு பொதுமுடக்கத்தை எதிர்கிறேன். ஆனால் பிரதமரின் தோல்வியும் உரிய திட்டங்களை வகுக்காத ஒன்றிய அரசின் செயலின்மையும் நம் நாட்டை மீண்டும் ஒரு முழு பொதுமுடக்கத்தை நோக்கித் தள்ளுகின்றன.” என்று ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், இத்தகைய மோசமான சூழ்நிலையில், ஏழை மக்களுக்கு உடனடியாக பொருளாதார உதவி உட்பட அனைத்து வகையான உதவிகளையும் வழங்க வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்