இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி, அவர்களை அவதூறு செய்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இதற்கு எதிராக அனைவரும் ஒரே குரலில் நிற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, இன்று(ஜனவரி 2), ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், இதற்கு எதிராக அனைவரும் ஒரே குரலில் நின்றால் மட்டுமே பெண்களுக்கு எதிரான அவமானங்களும் வகுப்புவாத வெறுப்பும் நிறுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
महिलाओं का अपमान और सांप्रदायिक नफ़रत तभी बंद होंगे जब हम सब एक आवाज़ में इसके ख़िलाफ़ खड़े होंगे।
साल बदला है, हाल भी बदलो- अब बोलना होगा!#NoFear
— Rahul Gandhi (@RahulGandhi) January 2, 2022
மேலும், “ஆண்டு மாறிவிட்டது; நிலைமையும் மாறிவிட்டது. இப்போது நாம் பேசியாக வேண்டும்” என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இந்த ட்வீட்டுடன், #நோஃபியர் என்ற ஹேஷ்டாக்கையும் இணைத்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.