Aran Sei

‘காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கப்பட்ட அனைத்தையும் பாஜக விற்றுவிட்டது’ – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் கடந்த 70 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட அனைத்தையும் பாஜக தலைமையிலான அரசு விற்றுவிட்டது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், இதனை தெரிவித்துள்ளார்.

“காங்கிரஸ் கட்சி எப்போதுமே நாட்டின் கட்டுமானத்தின் பகுதியாக இருந்து வருகிறது. கடந்த 70 ஆண்டுகளில் கடின உழைப்பால் உருவாக்கப்பட்ட அனைத்தையும் பாஜக அரசு 7 ஆண்டுகளில் விற்றுவிட்டது. மும்பை தாக்குதல் நடைபெற்றபோது, அப்போதை பிரதமர் மன்மோகன் சிங்கை கேள்வி எழுப்பிய ஊடகங்கள், அவரை வலிமையற்றவர் என அழைத்தன. ஆனால் புல்வாமா தாக்குதல் நடைபெற்றபோது அதே ஊடகங்கள் பிரதமர் மோடியிடம் கேள்விகளை எழுப்பவில்லை” என அவர் கூறியுள்ளார்.

Source : NDTV

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்