Aran Sei

‘பாஜகவின் நிர்வாக முறைக்கு இந்தியாவை பலி ஆக்காதீர்கள்’ – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பாஜகவின் நிர்வாக முறைக்கு இந்தியாவை பலி ஆக்காதீர்கள் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மே 1 ஆம் தேதி முதல் இந்தியாவில் உற்பத்தியாகும் தடுப்பூசிகளில் 50 விழுக்காடு வரை நேரடியாக மாநில அரசுகள் மற்றும் வெளி சந்தைகளுக்கு விற்பனை செய்துகொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. மேலும், மருத்திற்கான விலையை முன்பே அறிவிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

மத்திய அரசு உத்தரவைத் தொடர்ந்து கோவிட்ஷீல்ட் தடுப்பூசிக்கான விலையைச் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் இரு தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்த நிலையில், கோவாக்சின் தடுப்பூசிக்கான விலையைப் பாரத் பயோடெக் நிறுவனமும் அறிவித்துள்ளது.

உயரும் கொரோனா தடுப்பூசி விலை – தனியாருக்கு ரூ.1200 நிர்ணயித்த பாரத் பயோடெக்

இது தொடர்பாக, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மத்திய அரசின் தடுப்பூசி கொள்கையின் படி, மத்திய அரசுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகளுக்கு விலை ரூ150 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்கு ரூ.600, தனியார் நிறுவனங்களுக்கு ரூ.1200, ஏற்றுமதிக்கான விலையாக 15 முதல் 20 அமெரிக்க டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு, எதிர்கட்சிகளும் பல மாநில அரசுகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இன்று (ஏப்ரல் 26), ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா தடுப்பூசி குறித்து நீங்கள் விவாதித்தது போதும் என்றும், நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பாஜகவின் நிர்வாக முறைக்கு இந்தியாவை பலி ஆக்காதீர்கள் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்