ஒன்றிய அரசு கொரோனாவைக் கையாண்ட விதம் மற்றும் மூன்றாம் அலையை எதிர்கொள்ளத் தயாராகக் கோரி காங்கிரஸ் கட்சியின் சார்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில், முதல் மற்றும் இரண்டாம் அலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் “பேரழிவை தரக்கூடியதாக” இருந்தது தெளிவாக தெரிவதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும், “குறிப்பிட்ட சில காரணங்களாலேயே இது “பேரழிவை தரக்கூடியதாக” உள்ளது. அந்த காரணங்களை இந்த அறிக்கையில் குறிப்பிட முயன்றுள்ளோம். இந்த அறிக்கை வரவிருக்கும் மூன்றாம் அலையை எதிர்கொள்வதற்கு, எவ்வாறு செயல்பட வேண்டுமென்பதற்கு ஒரு வரைபடமாக இருக்கும்” என்று ராகுல் காந்தி கூறியுள்ளதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The idea behind our White Paper report on #COVID19 is to provide insights & information so that avoidable deaths can be prevented in the coming waves.
GOI must work on our constructive inputs in the interest of the country.
— Rahul Gandhi (@RahulGandhi) June 22, 2021
அதுமட்டுமல்லாது, அரசுக்கு தகவல்களை அளிக்க வேண்டும் மற்றும் தவறாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்குறித்த பார்வைகளை வெளிப்படுத்துவதே இந்த வெள்ளை அறிக்கையின் நோக்கம் என்று அவர் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த அறிக்கையின் நோக்கம் அரசை குற்றச்சாட்டுவது அல்ல. ஆனால், கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள இந்த தேசம் தயார்படுத்தவே வெளியிடப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.