Aran Sei

சீனா ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்பது எப்போது? – ஒன்றிய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி

நேற்று(ஜனவரி 27), அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள வாச்சா-டமாய் எல்லைப்பகுதியில் வைத்து, சீன மக்கள் விடுதலை ராணுவம் 19 வயதான மிரான் டாரோனை இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்த நிலையில், “சீனா ஆக்கிரமித்துள்ள நிலத்தை சீனாவிடம் இருந்து திரும்பப் பெறுவது எப்போது?” என்று ஒன்றிய அரசிடம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து, இன்று(ஜனவரி 28), தனது ட்விட்டர் பக்கத்தில், “மிரம் டாரோனை சீனா திருப்பி அனுப்பியது ஆறுதலாக இருக்கிறது. சீனா ஆக்கிரமித்துள்ள நிலத்தை இந்தியா எப்போது திரும்பப் பெறும் பிரதமரே?” என்று இந்தி மொழியில் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

அந்த ட்வீட்டுடன், 19 வயது அருணாச்சலப் பிரதேச சிறுவனை மீட்குமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தும் ஜனவரி 23ஆம் தேதியிட்ட தனது முந்தைய ட்வீட்டையும் மறுபகிர்வு செய்துள்ளார்.

முந்தைய ட்வீட்டில், இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, “அரசாங்கம் என்ற ஒன்று இருந்தால் உங்கள் கடமையை செய்யுங்கள். மீராம் டேரோனை மீட்டுக் கொண்டு வாருங்கள்” என்று வலியுறுத்தியிருந்தார்.

அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான சிறுவன் மிரான் டாரோன் காணாமல் போன ஒரு வாரத்திற்குப் பின்னர், நேற்று(ஜனவரி 27), அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள வாச்சா-டமாய் இன்னும் எல்லைப்பகுதியில் வைத்து சீன மக்கள் விடுதலை இராணுவம் அச்சிறுவனை இந்திய இராணுவத்திடம் ஒப்படைத்தது.

முதலமைச்சராக இருந்த மோடி தேசப்பாதுகாப்பு பற்றி பேசினார்; பிரதமர் மோடி சீனா குறித்து பேச மறுப்பது ஏன்? – ஒவைசி கேள்வி

இது குறித்து, ஒன்றிய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், பெருமைமிக்க இந்திய ராணுவத்திற்கு நன்றி. எங்கள் சிறுவனைப் பாதுகாப்பாக வீட்டுக்குத் திரும்ப அழைத்து வந்துள்ளோம். சிறுவனுக்கு மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன” என்று கூறியுள்ளார்.

முன்னதாக, லடாக்கில் உள்ள சீன ஆக்கிரமிப்பு எல்லை கோட்டிற்கு அருகில் பாங்காங் த்சோ ஏரியில், சீனா பாலம் கட்டுவதாக வெளியான செய்திகள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காப்பதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியிருந்தார்.

கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை பிரச்சனையை ஒன்றிய அரசு கையாளும் விதம் குறித்து, தொடர்ச்சியாக ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

Source: ANI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்