Aran Sei

லடாக்கில் பாலம் கட்டும் சீனா: பிரதமர் மௌனம் காப்பது ஏன்? – ராகுல் காந்தி

டாக்கில் உள்ள சீன ஆக்கிரமிப்பு எல்லை கோட்டிற்கு அருகில் பாங்காங் த்சோ ஏரியில், சீனா பாலம் கட்டுவதாக வெளியான செய்திகள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காப்பதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து, தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, “பிரதமரின் மௌனம் காது கேளாதது. நமது நிலம், நமது மக்கள், நமது எல்லைகள் சிறப்பானவை” என்று தெரிவித்துள்ளார்.

சீன ஆக்கிரமிப்பு எல்லை கோட்டிற்கு மிக அருகில் உள்ள பாங்கோங் த்சோ ஏரியின் மீது, இரண்டு மாதங்களுக்கும் மேலாக சீனா ஒரு பாலம் கட்டி வருவதாக கூறும் செய்தி குறிப்பில் ஒன்றையும் அந்த ட்வீட்டுடன் இணைத்துள்ளார். இப்பாலம் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரையை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளதாக என்று அச்செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை பிரச்சனையை ஒன்றிய அரசு கையாளும் விதம் குறித்து, தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தியும் விமர்சித்து வருகின்றனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்