Aran Sei

கொரோன காலத்தில் அதானியின் சொத்து மதிப்பு உயர்ந்தது எப்படி? – ராகுல் காந்தி கேள்வி

கொரோனா பொருந்தொற்று காலத்தில் மக்கள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், தொழிலபதிபர் கௌதம் அதானியால் தனது  சொத்து மதிப்பு 50 விழுக்காடு  எப்படி உயர்த்த முடிந்தது என காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பான செய்தியைத் தனது ட்விட்டரில் பகிர்ந்த ராகுல் காந்தி, ”2020ல் உங்கள் சொத்து மதிப்பு எவ்வளவு உயர்ந்தது? பூஜ்யம். நீங்கள் போராடிக் கொண்டிருக்கும்போது அதானி சொத்து 50 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. அவர் 12 லட்சம் கோடி சம்பாதித்துள்ளார். ஏன் என்று சொல்ல முடியுமா?” என ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.

புளூம்பேர்க் பில்லியனர்கள் குறியீட்டின் படி, முதல் தலைமுறை தொழில் முனைவரான அதானியின் சொத்து  2021 ஆம் ஆண்டில் 1620 கோடி அமெரிக்க டாலரில் இருந்து 5000 கோடி அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. இது உலகின் மிகப்பெரிய செல்வம் ஈட்டியவராக அவரை ஆக்கியது, 2021 இல் உலகின் மிகப் பெரும் பணக்காரர் என்ற பட்டத்திற்காக போட்டியிட்ட ஜெஃப் பெஸோஸ் மற்றும் எலோன் மஸ்க்கை விட அதானி பெற்ற சொத்து மதிப்பு அதிகம்.

அம்பானி, அதானி போன்ற தொழிலதிபர்களுக்குச் சாதகமாக பாஜக தலைமையிலான மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என ராகுல் காந்தி தெரிவித்தார்.

சமீபத்தில், மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக பேசிய ராகுல், நாட்டில் இப்போது நான்கு பேர் ‘ஹம் டூ, ஹமாரே (நாம் இருவர், நமக்கு இருவர்)’ என்ற ஒரு நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாகவும், இந்தச் சட்டங்கள் “விவசாயிகள், சிறு, நடுத்தர வர்த்தகர்கள் மற்றும் மண்டிகளை அழித்து , பிரதமரின் “முதலாளித்துவ நண்பர்களுக்கு” நன்மை பயக்கும் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

Source : The Indian Express

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்