போராடுபவர்களை அந்தோலன் ஜீவிகள் (தொழில் முறை போராட்டக்காரர்கள்) என்றும் ஒட்டுண்ணிகளான அவர்களிடமிருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும் என்றும் கூறிய பிரதமர் மோடிக்கு, முதலாளித்துவ ஜீவி என்றும், நாட்டை விற்பவர் என்றும் பதிலடிக் கொடுத்துள்ளார் ராகுல் காந்தி.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாய சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லி எல்லைகளில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நடாளுமன்றத்தில், குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய பிரதமர் மோடி, “கடந்த சில ஆண்டுகளில் அந்தோலன் ஜீவி (தொழில் முறை போராட்டக்காரர்கள்) எனும் புதிய இனம் உருவாகியுள்ளது. அவர்களை நீங்கள் அனைத்து போராட்டத்திலும் பார்க்கலாம். அவர்கள் உண்மையில் ஒட்டுண்ணிகள், அவர்களிடமிருந்து இந்தத் தேசத்தை நாம் பாதுகாக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
நான் ஒரு பெருமை மிக்க ‘அந்தோலன் ஜீவி’ – பிரதமரின் கருத்துக்கு ப.சிதம்பரம் பதிலடி
பிரதமரின் கருத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ள எதிர்கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள், ‘நான் அந்தோலன்’ (நான் போராட்டக்காரன்) எனும் ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்கின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து இன்று (பிப்பிரவரி 10) ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
Crony-जीवी है जो
देश बेच रहा है वो।#PSU_PSB_Sale— Rahul Gandhi (@RahulGandhi) February 10, 2021
அதில், “முதலாளித்துவ ஜீவி என்பவர் நாட்டை விற்பவர்” என்று, பிரதமரின் ‘அந்தோலன் ஜீவி’ கருத்திற்கு ராகுல் காந்தி பதிலடிக்கொடுத்துள்ளார்.
பொதுத்துறை நிறுவனங்களும் பஞ்சாப் சிந்து வங்கியும் தனியார்மயமாக்கப்படுவதை எதிர்த்து, ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்ட, #PSU_PSB_Sale என்ற ஹேஷ்டாக்கையும் ராகுல் காந்தி அந்த பதிவில் இணைத்துள்ளார்.
” மத ரீதியாகவும், மாநில ரீதியாகவும் மக்களை பிரிக்க பாஜக அரசு சதி ” : ராகேஷ் திகாயத்
முன்னதாக, மக்களவையில் பேசிய, அகாலி தளம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சிம்ரத் கவுர் பாதல், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளைப் பிரதமர் ஒட்டுண்ணிகள் என்கிறார் என்றும், நமக்கு அன்றாடம் உணவு வழங்குபவர்களைப் பிரதமர் அவ்வாறு குறிப்பிட்டற்கு கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.