Aran Sei

மத்திய அரசின் அலட்சியமே உயிரிழப்பு ஏற்பட காரணம் – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

க்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையும் அவசர சிகிச்சை பிரிவுகளில் படுக்கைகள் இல்லாமல் போனதும்தான் பல மரணங்களை ஏற்பட காரணமாக இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாட்டின் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருவது குறித்து, அதற்கு மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து விமர்சித்து வருகிறது.

இந்நிலையில், இன்று (ஏப்ரல் 23), ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில்,  “கொரோனா தொற்று ஆக்சிஜன்  குறைப்பாட்டை ஏற்படுத்தலாம். ஆனால், ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையும் அவசர சிகிச்சை பிரிவுகளில் படுக்கைகள் இல்லாது போனதும்தான் பல மரணங்களை ஏற்படுத்துகிறது. இந்திய அரசே, இது உங்களால்தான்.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சின் தகவல்படி, இந்தியாவில் ஒரே நாளில் 3,32,730 கொரோனா நோய்த்தொற்றுகளும் 2,263 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.  அதன் காரணமாக, மொத்த தொற்று எண்ணிக்கை 1,62,63,695 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 1,86,920 ஆகவும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்