“மோடி ஜி! முதலாளிகளை விட்டு விலகி, விவசாயிகளுக்கு ஆதரவளியுங்கள்” என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய அரசு கோண்டு வந்துள்ள மூன்று விவசாய சட்டங்களை திரும்ப பெறக்கோரி, டெல்லி எல்லைகளில், கடந்த 45 நாட்களுக்கு மேலாக, விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பஞ்சாப், ஹரியானா மட்டுமின்றி, நாட்டில் உள்ள பல மாநிலங்களில் இருந்தும் இந்த போராட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டுள்ளனர்.
ராமர் கோவில் கட்டுவதை சகித்துகொள்ளாமல் விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர் – யோகி ஆதித்யனாத்
இதுவரை, 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டக் களத்தில் உயிரிழந்துள்ளனர். மறுபுறம், போராடும் விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்றன.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, விவசாயிகளின் இந்த போராட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்துவருகிறார்.
अब भी वक़्त है मोदी जी, अन्नदाता का साथ दो, पूँजीपतियों का साथ छोड़ो! pic.twitter.com/yztDVwokWZ
— Rahul Gandhi (@RahulGandhi) January 10, 2021
இந்நிலையில், இன்று (ஜனவரி 10) ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்னும்கூட நேரம் இருக்கிறது மோடி ஜி. நமக்கு உணவளிக்கும் விவசாயிகளை ஆதரியுங்கள். முதலாளிகளை விட்டு விலகி வாருங்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், மக்களவையில் அவர் நிகழ்த்திய உரையில் இருந்து ஒரு பகுதியை ராகுல் காந்தி இந்த ட்வீட்டுடன் இணைத்துள்ளார். அதில், விவசாயிகளின் பிரச்சினைகளை எடுத்துரைக்கும் ராகுல் காந்தி, மத்திய அரசை விமர்சித்துள்ளதும இடம் பெற்றுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.