Aran Sei

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பணம் போடாமல் பழி போடும் மத்திய அரசு – ராகுல்காந்தி குற்றச்சாட்டு

புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் புலம்பெயர தொடங்கிய நிலையில், அவர்களின் வங்கி கணக்கிற்கு பணத்தை அளிப்பதுதான் மத்திய அரசின் பொறுப்பாகும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இன்று (ஏப்ரல் 20), தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிந்துள்ள அவர், “புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் புலம்பெயர தொடங்கிவிட்டார்கள். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், அவர்களின் வங்கிக் கணக்குகளில் பணத்தை அளிப்பதுதான் மத்திய அரசின் பொறுப்பாகும். ஆனால், தேவையான உதவியைச் செய்யாமல், கொரோனா பரப்புவதாக மக்களை மத்திய அரசு  குறை கூறுவதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது முந்தைய ட்வீட்டில், கொரோனா காலத்தில் பணியாற்றும் மருத்துவ சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்கும் காப்பீடு  திட்டத்தைக் கடந்த மாதம் 24 ஆம் தேதியுடன் மத்திய அரசு நிறுத்தியதை காங்கிஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், மத்திய அரசுக்கு நன்றி என்ற குணமே இல்லாமல் போய்விட்டது என்று தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்