Aran Sei

‘வேலை நாளுக்கும் விடுமுறை நாளுக்குமான இடைவெளியைக் குறைத்ததே மோடிஅரசின் வளர்ச்சி’ – ராகுல் காந்தி சாடல்

ஞாயிறுகிழமைக்கும் திங்கள்கிழமைக்கும் இடையிலான வித்தியாசத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது தான் பாஜக அரசின் ’வளர்ச்சி’ என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்ததை தொடர்ந்து, மேலும் 4 ஆயிரம் சிறிய நிறுவனங்கள் மூடப்படலாம் என்று ஊடகங்களில் வெளியான செய்தியை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி இதனைக் கூறியுள்ளார்.

“பாஜக ஆட்சியில் ‘வளர்ச்சி’ என்பது ஞாயிற்றுகிழமைக்கும், திங்கள்கிழமைக்கும் இடையிலான வித்தியாசத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததது தான். வேலைகள் இல்லாதபோது ஞாயிறு, திங்கள் எல்லாம் ஒன்று தான். அதில் ஒரு முக்கியத்துவமும் இல்லை” என அவர் பதிவிட்டுள்ளார்.

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்