Aran Sei

ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் அமைப்புகளை, இனி சங் பரிவார் என அழைக்கப்போவதில்லை – ராகுல் காந்தி விளக்கம்

ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (RSS) மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளை சங் பரிவார் அமைப்புகள் என இனி அழைக்கப்போவதில்லை என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

உத்திரபிரதேசத்தில் கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகள் துன்புறுத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த ராகுல் காந்தி. இது சிறுபான்மையினருக்கு எதிராக மற்ற சமூகத்தினரை தூண்டிவிடும் ‘விஷமத்தனமான பிரச்சாரத்தின்’ விளைவு எனக் கூறியுள்ளார்.

‘விவசாய சட்டங்களுடன் புதிய தொழிலாளர்கள் சட்டங்களையும் எதிப்போம்’: தொழிலாளர் – விவசாயிகள் இணையும் மகாபஞ்சாயத்து

இது தொடர்பாக தனது ட்விட்டரில் இந்தியில் பதிவிட்டுள்ள அவர், பரிவார் என்றால் குடும்பம். குடும்பத்தில் பெண்கள் இருப்பார்கள், முதியவர்களுக்கு மரியாதை இருக்கும், இரக்கம், பாசம் போன்ற குணங்கள் இருக்கும். ஆனால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இவை இல்லை என்று நான் நம்புகிறேன் எனக் கூறியுள்ளார்.

மேலும், “ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் தொடர்புடைய அமைப்புகளை சங் பரிவார் என இனி அழைக்கமாட்டேன்” என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்