Aran Sei

வங்கி ஊழியர்கள் போராட்டம்: ‘லாபம் தனியாருக்கு நஷ்டம் நாட்டிற்கு’ – ராகுல் காந்தி விமர்சனம்

லாபத்தை தனியார்மயமாக்கி நஷ்டத்தைத் தேசியமயமாக்குகிறது என்று வங்கிகளைத் தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கை குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் அதன் வழியாக ரூ.1.75 லட்சம் கோடி நிதி திரட்டப்படும்.”  என்று அறிவித்திருந்தார்.

இதனையடுத்து, வங்கிகளைத் தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பங்குகளை விற்பதன் மூலம் நிதி திரட்ட திட்டம் – இந்த காலாண்டிற்குள் ரூ3,200 கோடி திரட்ட பஞ்சாப் நேஷன்ல் வங்கி திட்டம்

இந்த எதிர்ப்பின் அடுத்தக்கட்ட நகர்வாக, நேற்றும் இன்றும்  நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைத்துள்ள இந்தப் போராட்டத்தில் நாடு தழுவிய அளவில் 9 ஊழியர் சங்கங்கள் பங்கேற்றுள்ளன.

இந்நிலையில், இன்று (மார்ச் 16), இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ராகுல் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அதில்,  “மத்திய அரசானது லாபத்தைத் தனியார் மயமாக்குகிறது. நஷ்டத்தை தேசியமயமாக்குகிறது. இந்தியாவின் நிதி பாதுகாப்பில் கடுமையாக சமரசம் செய்யும் விதமாக, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் மோடியின் நண்பர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.” என்று அவர் விமர்சித்துள்ளார்.

அரசின் தனியார்மயமாக்கல் நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் – வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

மேலும், தனியார்மயமாக்கலுக்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் வங்கி ஊழியர்களின் போராட்டத்துக்குத் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக வருகின்ற மார்ச் 17 ஆம் தேதி பொதுத்துறை காப்பிட்டு நிறுவன ஊழியர்களும், மார்ச் 18 ஆம் தேதி எல்ஐசி நிறுவன ஊழியர்களும் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்