Aran Sei

‘வரி என்ற பெயரில் மக்களிடம் இருந்து பணம் பறிக்கும் அரசு’ – பெட்ரோலிய பொருட்கள் மீதான வரிக்கு ராகுல் காந்தி கண்டனம்.

credits : indian express

பெட்ரோலிய பொருட்கள்மீது வரி என்ற பெயரில் அரசு மக்களிடம் இருந்து பணத்தை பறிக்கிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், “பொதுப் போக்குவரத்திற்கான அசௌகரியமான வரிசைகள் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மட்டுமல்ல. உண்மையான காரணத்தை அறிய உங்கள் நகரத்தின் பெட்ரோல்-டீசல் விகிதங்களை பாருங்கள்” என அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும், பெட்ரோல் டீசல் மீது அதிக வரிகளை விதித்திருக்கும் அரசை விமர்சிக்கும் விதமாக, ’#TaxExtortion’ (மிரட்டிப் பணம் பறிக்கும் வரி) என்ற ஹேஷ்டேக்கை அவர் அந்த ட்விட்டர் பதிவில் பயன்படுத்தி  இருக்கிறார்.

டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வெளியே பாம்புபோல நீண்ட வரிசைகள் காணப்பட்டதாகவும், சில இடங்களில் பயணிகளின் சராசரி காத்திருப்பு ஒரு மணி நேரம்வரை சென்றதாகவும் செய்திகள் வெளியான நிலையில், ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவு வந்துள்ளது.

கலால் வரி மற்றும் பெட்ரோலிய பொருட்கள்மீதான வரிமூலம் அரசு கோடிகளில் வருமானத்தை ஈட்டி வருவதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்