Aran Sei

‘ஒன்றிய அரசின் தனியார்மய கொள்கைக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்’ – ராகுல் காந்தி

பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, பொதுமக்களை கொள்ளையடிப்பதோடு, விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் பைகளில் எஞ்சியிருக்கும் பணத்தையும் எடுத்துக்கொண்டு சுரண்டுவதில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

நேற்று (ஆகஸ்ட் 2), கேரள மாநிலம் கண்ணூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தை இணையவழியில் திறந்து வைத்துப் பேசிய ராகுல் காந்தி, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி அதிகரித்துக்கொண்டேதான் வருகிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

எரிபொருளின் விலையை அதிகரிப்பதன் வழியாக ஒன்றிய அரசு 25 லட்சம் கோடி வசூலித்துள்ளது. ​​இவ்வாறு கிடைக்கப்பெற்ற பணம் எங்கு சென்றது என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசுக்கு உள்ளது. இந்நிதியை எந்த நலத்திட்டங்களுக்கும் அரசு பயன்படுத்தவில்லை. மோடி ஆட்சியின் கீழ் பயன்பெறுபவர்கள் கார்ப்பரேட்டுகள் மட்டுமே. பொதுமக்களை கொள்ளையடிப்பதன் வழியாக, கார்ப்பரேட்டுகளை மேலும் பணக்காரர்களாக மாற்ற மோடி உதவி செய்து வருகிறார்.” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இப்போது, ​​இந்நாட்டின் சொத்துக்களான பொதுத்துறை நிறுவனங்களை அந்நண்பர்களிடம் ஒப்படைக்கும் முடிவை மோடி எடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இது தொடர்பான விவாதத்தை நடத்தாமல் ஒன்றிய அரசு ஓடி ஒளிந்துக்கொள்கிறது. பொதுத்துறை நிறுவனங்களை விற்கும் மோடி அரசின் முயற்சிக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் தொடங்கும்.” என்று ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

Source: New Indian Express

தொடர்புடைய பதிவுகள்:

‘மோடியால் இந்நாட்டின் சொத்துக்களை வெளிநாட்டவருக்கு விற்க முடியாது’ – மம்தா பானர்ஜி கண்டனம்

70 ஆண்டுகால  இந்தியாவின் பொக்கிஷங்களை மோடி அரசு விற்கிறது – ராகுல் காந்தி கண்டனம்

ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் – ஏன் மோடிஜிக்கு பேசமாட்டாரா என ராகுல் காந்தி கேள்வி

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்