கொரோனா பேரிடர் காலத்தில், ஒன்றிய அரசு தன்னுடைய பணிகளை சரியாகச் செயத்திருந்தால், இந்தியாவுக்கு இந்த மோசமான நிலை வந்திருக்குமா? என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர்கள், ரெம்டெசிவிர் மருந்து போன்ற கொரோனா சிகிச்சை தொடர்பான சாதனங்களுக்கும், மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான், வங்கதேசம், பூட்டான், நேபாள் போன்ற அண்டை நாடுகள் தொடங்கி உலக நாடுகளும் இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன. அவர்களில் சில நாடுகளிலிருந்து, கொரோனா மருந்துகளும், மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்களும், சிகிச்சை சாதனங்களும் இந்தியாவிற்கு வந்து சேர்ந்துள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து, இன்று (மே 10), தனது டிவிட்டர் பக்கத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “தொடர்ச்சியாக, வெளிநாடுகளில் இருந்து உதவிகளைப் பெற்றுக்கொண்டு, ஒன்றிய அரசு பெருமையாக மார்தட்டிக்கொள்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
GOI’s repeated chest-thumping at receiving foreign aid is pathetic.
Had GOI done its job, it wouldn’t have come to this.
— Rahul Gandhi (@RahulGandhi) May 10, 2021
மேலும், ஒன்றிய அரசு தன்னுடைய பணிகளை சரியாகச் செயத்திருந்தால், இந்தியாவுக்கு இந்த மோசமான நிலை வந்திருக்குமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.