Aran Sei

‘கருப்பு பூஞ்சை மருந்துகளின் பற்றாக்குறையை போக்க என்ன செய்தீர்கள்?’ – ஒன்றிய அரசிடம் கேள்விகளை அடுக்கும் ராகுல் காந்தி

ருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு பயன்படும் ஆம்போடெரிசின் பி மருந்துகளின் பற்றாக்குறைக்கு என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று இந்திய ஒன்றிய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக, இன்று (ஜூன் 1), தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், “கருப்பு பூஞ்சை தொற்றுநோய் குறித்து ஒன்றிய அரசு தெளிவுபடுத்த வேண்டும். 1. கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு பயன்படும் ஆம்போடெரிசின் பி மருந்து பற்றாக்குறைக்கு என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது? 2. இந்த மருந்தை அந்நோயாளி எப்படி பெறுவது?” என்று கேள்விகளைப் பட்டியலிட்டுள்ளார்.

மேலும், மக்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக, மருந்து பெறுவதற்கான நடைமுறை சிக்கல்களை ஏன் அவர்கள் மீது ஏன் திணிக்கிறீர்கள் என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்