பாஜகவின் வருமானம் 50 விழுக்காடு உயர்ந்துள்ளது, மக்களின் வருமானம் உயர்ந்ததா என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக, இன்று (அகஸ்ட் 28), தனது டிவிட்டர் பக்கத்தில், பாஜகவின் வருமானம் குறித்த ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான சங்கத்தின் செய்தி குறிப்பைப் பகிர்ந்துள்ளார். அக்குறிப்பில், “2019-20 வரையிலான காலக்கட்டத்தில், தேர்தல் நன்கொடைகளின் வழியாக, பாஜகவின் வருமானது 50 விழுக்காடு அளவுக்கு உயர்ந்துள்ளது. ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான சங்கம் அறிக்கை.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
BJP’s income rose by 50%.
And yours?BJP की आय 50% बढ़ गयी।
और आपकी? pic.twitter.com/Q5HEISACDJ— Rahul Gandhi (@RahulGandhi) August 28, 2021
அச்சங்கத்தின் புதிய அறிக்கையின்படி, பாஜகவின் தற்போதைய சொத்துமதிப்பு 3,623.28 கோடியாக உள்ளது.
மேலும், தனது ட்வீட்டில், “பாஜகவின் வருமானம் 50 விழுக்காடு உயர்ந்துள்ளது, உங்கள் வருமானம் உயர்ந்ததா?” என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்புடைய பதிவுகள்:
70 ஆண்டுகால இந்தியாவின் பொக்கிஷங்களை மோடி அரசு விற்கிறது – ராகுல் காந்தி கண்டனம்
பாஜக நிர்வாகியாக இருந்தும் இஸ்லாமியர் என்பதால் கைவிடப்பட்டேன் – சிறைபட்ட பாஜக உறுப்பினரின் கதை
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.