Aran Sei

‘விவாதங்களுக்கு அனுமதி இல்லையென்றால், பின் நாடாளுமன்றம் இருப்பது எதற்கு?’- ராகுல் காந்தி கேள்வி

மூன்று விவசாய சட்டங்களை விவாதம் இன்றி ரத்து செய்திருப்பது, விவாதம் நடத்துவதற்கு ஒன்றிய அரசு அஞ்சுகிறது என்பதையே காட்டுகிறது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ஓர் ஆண்டிற்கும் மேலாக மூன்று விவசாய சட்டங்களை நீக்கக் கோரி விவசாயிகள் போராடி வரும் நிலையில், இன்று(நவம்பர் 29), ‘விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா,2021’ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூரின் ட்வீட் – வலுக்கும் எதிர்ப்புகள்

அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசியுள்ள ராகுல் காந்தி, “ஒன்றிய அரசு விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் என்று காங்கிரஸ் கணித்தது. மூன்று-நான்கு முதலாளிகளின் சக்தியானது, நம் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் வலிமையின் முன் நிற்க முடியாது. இச்சட்டங்களை ரத்து செய்தது விவசாயிகள் மற்றும் நம் நாட்டின் வெற்றியாகும்” என்று தெரிவித்துள்ளார்.

“எந்த விவாதமும் இல்லாமல், எந்த உரையாடலும் இல்லாமல் மசோதாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது துர்வாய்ப்பானது. இந்த மசோதாக்களுக்குப் பின்னால் உள்ள சக்திகள் குறித்து விவாதிக்க நாங்கள் விரும்பினோம். காரணம், இம்மசோதாக்கள் பிரதமரின் நோக்கத்தை மட்டும் பிரதிபலிக்கவில்லை, மாறாக இந்த மசோதாக்கள் பிரதமருக்குப் பின்னால் உள்ள சக்திகளின் நோக்கத்தையே பிரதிபலிக்கின்றன. அதைத்தான் நாங்கள் விவாதிக்க விரும்பினோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடகாவில் இந்துத்துவாவினரால் மிரட்டப்படும் கிறிஸ்துவ பாதிரியார்கள் – ஜெபக் கூட்டங்களை நடத்த வேண்டாம் என காவல்துறை அறிவுரை

“நாங்கள் விவசாய விளைப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைத் தொடர்பான பிரச்சினை குறித்து விவாதிக்க விரும்பினோம். லக்கிம்பூர் கெரி சம்பவம் குறித்து விவாதிக்க விரும்பினோம். இந்த விவசாயிகள் போராட்டத்தில் இறந்த 700 விவசாயிகள் குறித்து விவாதிக்க விரும்பினோம். துர்வாய்ப்பாக எந்த விவாதங்களும் அனுமதிக்கப்படவில்லை. விவாதங்களுக்கு அனுமதியே இல்லை என்றால் நாடாளுமன்றம் இருப்பதில் என்ன பயன்” என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Source: PTI

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்