Aran Sei

டெல்லி எல்லையில் எழுப்பப்படும் தடுப்புச் சுவர்கள்: ‘விவசாயிகளுடன் பிரதமர் போர் செய்யவுள்ளாரா?’ – காங்கிரஸ் கேள்வி

டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் பகுதிகளில் எழுப்பப்பட்டுள்ள தடுப்புகள் மற்றும் கான்செர்டினா கம்பிகளை சுட்டிக்காட்டி, பாலங்களை உருவாக்குங்கள், சுவர்கள் அல்ல என்று மத்திய அரசை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

டெல்லி எல்லைகளின் அருகில் விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் இடங்களில், காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.

விவசாயிகள் வரையறுக்கப்பட்ட பேரணி பாதையைக் கடக்க காவல்துறை அனுமதித்தது ஏன்? – செயல்பாட்டாளர்கள் கேள்வி

டெல்லியையும் உத்தரபிரதேசத்தையும் இணைக்கும் எல்லையில் உள்ள காசிப்பூர்-மீரட் நெடுஞ்சாலை பகுதியில், விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில், காவல்துறையினர் பேரிகேட் வைத்து நான்கு அடுக்கு தடுப்பு அரணை உருவாக்கியுள்ளனர். மேலும், அவற்றுக்கிடையில் கான்செர்டினா கம்பிகளை பொருத்தியுள்ளனர்.

டெல்லி-ஹரியானா எல்லையான சிங்கு பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் இரண்டு வரிசைக்கு சிமென்ட்டால் ஆன தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டு, இடையில் இரும்பு கம்பிகளை காவல்துறையினர் பொருத்தியுள்ளனர். நெடுஞ்சாலையின் மற்றொரு பகுதியிலும் இப்போது தற்காலிகமாக சிமென்ட் சுவர்கள் கட்டப்பட்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் டெல்லிக்குள் நுழையாத வண்ணம் தடுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

வீட்டுக்கு ஒருவர் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் – ஊர் கூடி முடிவெடுத்த பஞ்சாப் கிராம விவசாயிகள்

இந்நிலையில், இதுகுறித்து இன்று (பிப்பிரவரி 2), காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். அதில், “இந்திய அரசே, பாலங்களை கட்டுங்கள். சுவர்களை கட்டாதீர்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், எழுப்பப்பட்டுள்ள தடுப்பு சுவர்களின் புகைப்படங்களை இனைத்துள்ளார்.

உத்தரபிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவரான பிரியங்கா காந்தியும் இதுகுறித்து இன்று (பிப்பிரவரி 2) ட்வீட் செய்துள்ளார்.

அதில், “பிரதம மந்திரிஜி, நம்முடைய விவசாயிகளுடன் போர் செய்யவுள்ளீர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்