Aran Sei

‘அச்சுறுத்தும் கொரோனா தொற்று; முககவசங்களை மறவாதிருங்கள்’ – ராகுல் காந்தி அறிவுறுத்தல்

கொரோனா தொற்று எனும் மிகப்பெரிய அச்சுறுத்தல் தொடர்ந்து வருகிறது என்றும் தயவுசெய்து மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.

நேற்று (மார்ச் 14), இந்தியாவில் 25,320 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கையானது கடந்த 84 நாட்களில் அதிகபட்ச ஒருநாள் எண்ணிக்கையாகும். இதன் வழியாக, பதிவாகியுள்ள மொத்த தொற்று எண்ணிக்கையானது 1,13,59,048 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

‘ஒரே நாளில் 25 ஆயிரம் புதிய கொரோனா தொற்றுகள்; குறையும் இறப்பு விகிதம்’ – அமைச்சகம் தகவல்

நேற்று காலை வரையிலான அமைச்சகத்தின் தகவல்படி, நேற்று மட்டும் 161 பேர் தொற்றால் உயிரிழ்ந்துள்ளனர். இதன்வழி, மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 1,58,607 ஆக அதிகரித்துள்ளது. இந்த இறப்பு எண்னிக்கையானது கடந்த 44 நாட்களில் அதிகபட்சமாகும்.அதன் வழியாக, கொரோனா தொற்றிலிருந்து மீள்பவர்களின் விகிதம் 96.82 சதவீதத்திலிருந்து 96.75 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக இன்று (மார்ச் 15) ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் ஏற்கெனவே எச்சரித்திருந்த படியே, கொரோனா தொற்று எனும் மிகப்பெரிய அச்சுறுத்தல் தொடர்ந்து வருகிறது. அதனால், தயவுசெய்து மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக விலகலை பின்பற்றுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த ட்வீட்டில், கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதிக்குப் பிறகு, கொரோனா தொற்று பரவல் சீராக அதிகரித்து வருவதை விளக்கும் வளைகோட்டு (Graph) படத்தையும் இணைத்துள்ளார்.

இந்தியாவில் புதியவகை கொரோனா: ‘தொற்று தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசு மெத்தனம்’ – ராகுல் காந்தி கருத்து

கடந்த மாதம், ராகுல் காந்தி, “மத்திய அரசு கொரோனா குறித்து அலட்சியமாக இருக்கிறது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்திவிட்டோம் என்று அதீத நம்பிக்கையுடன் இருக்கிறது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் இன்னும் முடியவில்லை.” என்று எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்