Aran Sei

389 மலக்குழி மரணங்கள்: நம்முடைய மனசாட்சி நம்மை கொல்லாதிருக்க நடவடிக்கை எடுப்போம் – ராகுல் காந்தி

ம்முடைய நாட்டு குடிமக்களின் சுயமரியாதைக்கும் நம்முடைய கூட்டு மனசாட்சியின் சுயமரியாதைக்கு இனியும் இழுக்கு ஏற்படாமல் இருக்க, மலக்குழி மரணங்கள் விவகாரத்தில் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நேற்று (மார்ச் 10), மாநிலங்களவையில் பேசிய மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் ராமதாஸ் அத்வாலே, முறையான பாதுகாப்பு உபகரணங்களின்றி, கழிவுநீர் தொட்டி மற்றும் மலத் தொட்டிகளில் இறங்க பணிக்கப்பட்டதால் உயிரிழந்தவர்கள் தொடர்பான வழக்குகளில், 266 பேர் மீது முதல் தகவல் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

தொடரும் சாதிய பாகுபாடு : மலம் அள்ள நிர்ப்பந்திக்கப்பட்ட தலித் சிறார்கள்

மேலும், 2015-2019 ஆம் ஆண்டுவரை, 389 மலக்குழி மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து இன்று (மார்ச் 11), தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, கைகளால் மலம் அள்ளுதல் தடுப்புச் சட்டம், 2018-ஐ செயல்படுத்துவதில் இந்திய அரசு தவறிவிட்டது என்பதையே இது காட்டுகிறது என்று விமர்சித்துள்ளார்.

மேலும், நம்முடைய நாட்டு குடிமக்களின் சுயமரியாதைக்கும் நம்முடைய கூட்டு மனசாட்சியின் சுயமரியாதைக்கும் இனியும் இழுக்கு ஏற்படாமல் இருக்க, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

துப்புரவு பணியில் மனிதர்களை ஈடுபடுத்துபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – பேராசிரியர் லக்ஷ்மணன்

கடந்த பிப்பிரவரி மாதம், 2 ஆம் தேதி மக்களவையில், லாதூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுதாகர் துக்காராம் ஷ்ரங்கரேவின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், “சென்ற ஆண்டு  டிசம்பர் 31 வரையிலான ஐந்து ஆண்டுகளில், 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், கழிவுநீர் சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது 340 தூய்மைப்பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.” என்று கூறியிருந்தது.

சமூக நீதி அமைச்சகத்தின் பதிலில், அதிகப்படியாக உத்தரபிரதேசத்தில் 52 பேரும், அதற்கடுத்தபடியாக தமிழ்நாட்டில் 43 பேரும் டெல்லியில் 36 பேரும் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மகாராஷ்டிராவில் 34 பேரும், ஹரியானா மற்றும் குஜராத்தில் தலா 31 பேரும் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் 5 ஆண்டுகளில் 340 பேர் உயிரிழப்பு – மத்திய அரசு தகவல்

2018 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட கைகளால் மலம் அள்ளுதல் தடுப்புச் சட்டம், 2018-இன் படி, அத்தொழிலை செய்பவர்களை மீட்டு, அவர்களுக்குரிய நிவாரணத்தை வழங்கி, அவர்களின் மறுவாழ்வை அரசு உறுதி செய்ய வேண்டும்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்