Aran Sei

‘மோடியின் ஆட்சியில் பெட்ரோல் டீசல் விலையேறாது ஒரு நாள் இருந்தால், அது மிகப்பெரிய செய்தி’ – ராகுல் காந்தி விமர்சனம்

மோடியின் ஆட்சியில் பெட்ரோல் டீசல் விலையேறாது ஒரு நாள் இருந்தால், அது மிகப்பெரிய செய்தி என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

அண்மை காலங்களாக, தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றம் கண்டு வருகிறது. கொரோனா ஊடரங்கு காலத்தில், இந்த விலையேற்றம் மக்களை கடுமையாக பாதிப்பதாக எதிர்கட்சிகள் விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில், இவ்விலை ஏற்றம்குறித்துத் தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி,  “மோடியின் தலைமையிலான ஒன்றிய அரசின் வளர்ச்சி என்பது ஏதாவது ஒரு நாளில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயராமல் இருந்தால், அதுவே மிகப்பெரிய செய்தியாக மாறும். இந்த நிலையில்தான் அரசு உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

இன்று (ஜூன் 18), டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.96.93 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.87.69 ஆகவும் உள்ளது. மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.104.53 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.95.75 ஆகவும் உள்ளது. மும்பையில் பெட்ரோல் மற்றும் டீசல் முறையே ரூ.102.82 ஆகவும் ரூ.94.84 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்