Aran Sei

‘விவசாயிகளுக்கு மட்டுமல்ல, முழு நடுத்தர வர்க்கத்தின் வாழ்வாதாரமும் பறிக்கப்படும்’ – ராகுல் காந்தி

ம் நாட்டின் முதுகெலும்பை உடைத்து விவசாயத்தின் மீதான கட்டுப்பாட்டைக் கார்ப்பரேட்டுகளுக்கு வழங்குவதற்கான ஒரு சூழ்ச்சி தான் இந்த மூன்று விவசாய சட்டங்களும் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இரண்டு நாள் பயணமாக ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்றுள்ளார். நேற்று (பிப்பிரவரி 13), அஜ்மீர் மாவட்டம் ரூபங்கர் கிராமத்தில் நடந்த டிராக்டர் சபாவிலும், ஜாட் மக்கள் அதிகம் உள்ள நாகௌர் மாவட்டம் மக்ரானாவில் நடந்த விவசாயிகள் மகாபஞ்சாயத்திலும் கலந்துக்கொண்டு பேசியுள்ளார்.

‘யானை புக்க புலம் போலத் தானும் உண்ணான்’: மோடியின் அரசும் பொதுநலனும் – ரவி ஜோஷி

அப்போது டிராக்டர் சபாவில் பேசிய ராகுல் காந்தி, “பிரதமர் நரேந்திர மோடி முழு விவசாயத் துறையையும் தனது இரண்டு நண்பர்களிடம் ஒப்படைக்க முயற்சிக்கிறார். நம் நாட்டில் 40 சதவீதம் மக்கள் விவசாயத்தோடு தொடர்புடையவர்கள். விவசாயத்தால், விவசாயிகள், தொழிலாளர்கள், வர்த்தகர்கள், சிறு வணிகர்கள், கடைக்காரர்கள், தெருவோர வியாபாரிகள் என்று பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது.” என்று கூறியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ஐஐடி-களில் அநியாயமாக மறுக்கப்படும் இட ஒதுக்கீடு –  ஆர்டிஐ மூலம் கிடைத்த அதிர்ச்சி தகவல்

“இந்தப் புதிய சட்டங்கள் வழியாக விவசாயிகளுக்கு நிறைய வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் மோடிஜி கூறினார். உண்மையில், அந்த வாய்ப்புகள் என்ன என்றால் பசி, வேலையின்மை மற்றும் தற்கொலைதான். ஒரு சில பெரிய நிறுவனங்கள் உணவுத் தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பதுக்கி வைக்கும். இதன் வழியாக தங்கள் வியாபாரத்தை பெருக்கி, 80 சதவீதம் முதல் 90 சதவீதம் மொத்த விவசாயத் துறையையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும்.” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், “இச்சட்டங்களை அமல்படுத்துவதன் வழியாக இளைஞர்களின் எதிர்காலமே முடிவடையும். இது விவசாயிகளின் பிரச்சினை மட்டுமல்ல … முழு நடுத்தர வர்க்கமும் இச்சட்டத்தால் பாதிக்கப்படும். அதன் வாழ்வாதாரமே பறிக்கப்படும்.” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டதாக தி இந்து தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்