Aran Sei

‘டெல்டா ப்ளஸ் தொற்றை கொரோனா தடுப்புமருந்து தடுக்குமா?’ – ஒன்றிய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி

டெல்டா ப்ளஸ் கொரோனா தொற்றின் பரவலை கண்டறிந்து தடுக்க ஏன் பெரிய அளவிலான பரிசோதனைகள் செய்யப்படவில்லை என்றும், அதற்கு எதிரான தடுப்பு மருந்துகள் எவ்வளவு பயனுள்ள செயற்பாட்டை அளிக்கும் என்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒன்றிய அரசிற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒன்றிய சுகாதார அமைச்சகத்தால் ஆபத்தானது என்று அறிவிக்கப்பட்டுள்ள டெல்டா பிளஸ் என்ற உருமாற்றம் பெற்ற கொரோனா தொற்றானது, நாம் நாட்டில் கொரோனா மூன்றாவது அலையை உருவாக்கக்கூடும் என்று பல மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில், இன்று (ஜூன் 25), தனது ட்விட்டர் பக்கத்துல் ராகுல் காந்தி, “டெல்டா ப்ளஸ் என்ற உருமாற்றம் பெற்ற கொரோனா தொற்றுநோய் குறித்து மோடி அரசிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும். இத்தொற்றை கண்டறிந்து தடுக்க ஏன் பெரிய அளவில் பரிசோதனைகள் செய்யப்படவில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “இத்தொற்றுக்கு எதிராக கொரோனா தடுப்புமருந்துகள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்? இதுதொடர்பான முழுமையான தகவல்கள் எப்போது கிடைக்கும்? கொரோனா மூன்றாவது அலையின்போது, டெல்டா ப்ளஸ் தொற்றைக் கட்டுப்படுத்த என்னென்ன திட்டங்கள் வைத்துள்ளீர்கள்?” என்று பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசிடம் ராகுல் காந்தி கேள்விகளை அடுக்கியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்