விவசாயிகளின் அகிம்சை வழியிலான சத்தியாகிரகம் இன்றும் உறுதியோட நடந்து வருகிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசு இயற்றிய மூன்று விவசாய சட்டங்களை நீக்கக் கோரும் விவசாயிகளின் போராட்டம் 300 நாட்களை எட்டியதை அடுத்து, போராடும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சா நாடு முழுவதும் பொது வேலை முடக்கத்தை அறிவித்தது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை தவிர்த்து, பெரும்பாலான எதிர்கட்சிகளும் மாநில கட்சிகளும் இந்த பாரத் பந்த்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். மேலும், தொழிற்சங்கத்தினரும் பலதரப்பட்ட அமைப்பினரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இன்று (செப்டம்பர் 27) காலை 6 மணியளவில் விவசாயிகளின் போராட்டம் தொடங்கியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பர்னாலா ரயில்நிலையத்தில் ரயில் தண்டவாளங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் போராட்டத்தின் காரணமாக உத்தரபிரதேசத்தில் இருந்து காசிப்பூர் செல்லும் சாலை மூடப்பட்டுள்ளதாக டெல்லி காவல் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று (செப்டம்பர் 27), தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, “விவசாயிகளின் அகிம்சை வழியிலான சத்தியாகிரகம் இன்றும் உறுதியோட நடந்து வருகிறது. ஆனால், சுரண்டல் அரசு இதை விரும்பவில்லை. அதனால் காரணமாகவே இன்று பாரத் பந்த் நடைபெறுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.
किसानों का अहिंसक सत्याग्रह आज भी अखंड है
लेकिन शोषण-कार सरकार को ये नहीं पसंद है
इसलिए #आज_भारत_बंद_है #IStandWithFarmers— Rahul Gandhi (@RahulGandhi) September 27, 2021
மேலும், தனது ட்வீட்டுடன் ‘IStandWithFarmers’ என்ற ஹேஷ்டேக்கையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.