Aran Sei

’தடுப்பூசி, ஆக்சிஜன், படுக்கை வசதி இல்லை; பி.எம். கேர்ஸ் எங்கே?’ – ராகுல்காந்தி கேள்வி

கொரோனா சோதனைகள், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், வெண்டிலேட்டர், ஆக்சிஜன் போன்றவை இல்லை என்றும் ஆனால், கொரோனா தடுப்பூசியின் பெயரில் ஒரு திருவிழா மோசடி மட்டும் இருக்கிறது என்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசைக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மக்களுக்குக் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தும் நோக்கில், ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 14 ஆம் தேதிவரை நாடும் முழுவதும் தடுப்பூசி திருவிழாவை மத்திய அரசு நடத்தியது.

குஜராத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு: பாஜக தலைவருக்கு எப்படி கிடைத்தது 5000 தடுப்பூசிகள்? – காங்கிரஸ் கேள்வி

இந்நிலையில், இதுதொடர்பாக, இன்று (ஏப்ரல் 15), தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, “கொரோனா சோதனைகள் இல்லை. மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை. வெண்டிலேட்டரோ ஆக்சிஜனோ இல்லை. கொரோனா தடுப்பூசியும் இல்லை. ஆனால், கொரோனா தடுப்பூசியின் பெயரில் ஒரு திருவிழா மோசடி மட்டும் இருக்கிறது.” என்று விமர்சித்துள்ளார்.

இறுதியாக, ‘பிஎம் கேர்ஸ் நிதி எங்கே?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்