Aran Sei

உ.பி, மாயாவதியை முதல்வர் வேட்பாளராக்கி கூட்டணி அமைக்க பேசினோம், அவர் பதிலளிக்கவில்லை – ராகுல் காந்தி தகவல்

த்தரப் பிரதேச தேர்தலில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைக்க பேசினோம் என்றும் ஆனால், அதற்கு அவர் பதிலளிக்கவில்லை என்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

உ.பி தேர்தல்: சமாஜ்வாதிக்கு பயந்தே பி.எஸ்.பி., ஆதரவாளர்கள் பாஜகவிற்கு வாக்களித்தனர் – மாயாவதி

அண்மையில் நடந்த உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக கட்சி 255 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான அப்னா தளம் 12 இடங்களையும், நிஷாத் கட்சி 6 இடங்களிலும் வெற்றி பெற்றன.

எதிர்கட்சியான அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி 111 இடங்களில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணியான ராஷ்ட்ரிய லோக்தா தளம் 8 இடங்களையும், சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி 6 இடங்களையும் கைப்பற்றின.

உ.பி தேர்தல்: பாஜகவின் வெற்றிக்கு உதவிய மாயாவதி, ஓவைசிக்கு பாரத ரத்னா விருது வழங்குக – சஞ்சய் ராவத் கிண்டல்

காங்கிரஸ், ஜனசத்தா தளம் லோக்தந்திரிக் ஆகியவை தலா 2 இடங்களிலும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி வெறும் 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.

இந்நிலையில், இன்று (ஏப்ரல் 9), டெல்லியில் அம்பேத்கர் குறித்த புத்தகம் ஒன்றின் வெளியிட்டு விழாவில் ராகுல் காந்தி கலந்துக்கொண்டு பேசியுள்ளார்.

அப்போது மாயாவதி குறித்து பேசியுள்ள ராகுல் காந்தி, “உத்தரப் பிரதேசத்தில் மாயாவதியிடம் கூட்டணி அமைக்க பேசினோம். முதலமைச்சர் வேட்பாளராக வரும்படி கூறினோம். அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. அதனால் காங்கிரஸ் பாதிப்புக்கு உள்ளானது. இதன் வழியாக, ஆளும் பாஜகவுக்கு ஒரு தெளிவான பாதையை மாயாவதி காட்டினார். மாயாவதியின் இச்செயலுக்கு காரணம் சிபிஐ, அமலாக்கத் துறை, பெகசிஸ் ஆகியவைதான்”  என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

‘சாதி ரீதியாக வாக்குகளைத் பெறவே பாஜக புதிய அமைச்சர்களை நியமிக்கிறது ‘ – மாயாவதி குற்றச்சாட்டு

உத்தரப் பிரதேசத்தின் தலித்களின் குரலாக இருந்ததற்காக கன்ஷிராம் மீது எனக்கு மரியாதை இருக்கிறது என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Source: PTI

என் ஒவியத்தை தான் AR Rahman ஷேர் பண்ணிருக்காரு…

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்