Aran Sei

பாஜகவினரால் தாக்கப்பட்ட நீர்வளத்துறை அலுவலகம் : விவசாயிகளுக்கு ஆதரவளித்தால் பழிவாங்கிய பாஜக

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருவதால் டெல்லியின் நீர்வளத்துறை அலுவலகத்தை பாஜகவினர் தாக்கியுள்ளதாக அதன் துணை தலைவர் ராகவ் சதா குற்றம்சாட்டியுள்ளார். பாஜக குண்டர்கள் நீர்வளத்துறை அலுவலகத்தை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவிற்கும் உள்ளாட்சித் துறையில் நிலுவைத் தொகைச் செலுத்துவது தொடர்பாக மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில் டெல்லி பாஜக தலைவர் அதேஷ் குப்தா தலைமையில் நீர்வளத்துறை அலுவலகம் முன் இன்று காலை முதல் போராட்டம் நடந்து வந்துள்ளது என எண்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

இதையடுத்து மதியம் 12.30 மணியளவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியப்படி, பாஜக தொண்டர்கள் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்து நீர்வளத்துறை தலைமை அலுவலகத்தையும், அதன் துணை தலைவரான ராகவ் சதா அலுவலகத்தையும் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.

“அரசியலில் தோற்றால் இப்படித்தான் எதிர்கொள்வீர்களா” – அமித் ஷாவைச் சாடும் டெல்லி துணை முதல்வர்

இது குறித்து நீர்வளத்துறையின் துணை தலைவர் ராகவ் சதா ”பாஜக குண்டர்கள் டெல்லி நீர்வளத்துறை அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். எனது மொத்த அலுவலகமும் சூறையாடப்பட்டுள்ளது. ஊழியர்கள் மிரட்டப்பட்டுள்ளனர்” என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பாஜக குண்டர்கள், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படக்கூடாது என மிரட்டல் விடுத்ததாகச் செய்தியாளர் சந்திப்பில் ராகவ் கூறியுள்ளார்.

டெல்லி சட்டசபை சிறப்புக் கூட்டம் – விவசாய சட்டங்களைக் கிழித்து எறிந்த அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி நீர்வளத்துறை தலைமை அலுவலகத்தில் நடந்த தாக்குதல் குறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தன் ட்விட்டர் பக்கத்தில் “ இது போன்ற கோழைத்தனமான தாக்குதலுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம். டெல்லி அரசாங்கமும் ஆம் ஆத்மி கட்சியும் கடைசி மூச்சு வரை விவசாயிகள் பக்கமே நிற்கும். ஆம் ஆத்மி தொண்டர்கள் பாஜகவின் தாக்குதலுக்கு எதிர்வினையாற்றாமல் விவசாயிகளுக்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

இது குறித்து டெல்லியின் துணை முதலமைச்ச்ர் மனிஷ் சிசோடியா, ”பாஜகவின் மூத்த தலைவர்கள் தலைமையில் தாக்குதல் நடைபெறுகிறது. விவசாய போராட்டங்களுக்கு ஆதரவு அளித்ததற்காகப் பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை” என்று இந்தத் தாக்குதலை விமர்சித்து தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் 10-ம் தேதி, டெல்லியின் துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா வீட்டில் இல்லாத சமயத்தில், டெல்லிக் காவல்துறையினரின் உதவியுடன் பாஜக குண்டர்கள் அவருடைய வீட்டில் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்