Aran Sei

ரஃபேல் ஒப்பந்தம்: இந்தியாவைச் சேர்ந்த இடைத்தரகருக்கு 8 கோடி ரூபாய் வழங்கியுள்ள தசால்ட் நிறுவனம்

ந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையே நடந்த ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தின்போது, இந்தியாவைச் சேர்ந்த இடைத்தரகர் ஒருவருக்கு 8.62 கோடி ரூபாய் பணம் வழங்கியிப்பதற்கான காரணத்தை ரஃபேல் போர் விமான உற்பத்தியாளரான தசால்ட் நிறுவனம் தெரிவிக்க முடியாமல் தவிப்பதாக பிரான்ஸ் நாட்டின் புலனாய்வு பத்திரிகையான மீடியாபார்ட் தெரிவித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் நாட்டிலிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தை அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளிவந்த நாள் முதலே, இது விதிமுறைகளை மீறி நடக்கும் விஷயம் எனவும் இதில் பல்வேறு குளறுபடிகள் இருக்கின்றன எனவும் எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் ஊழல் தடுப்பு பிரிவு,  தசால்ட் நிறுவனத்தின் கணக்குகளைச் சரிபார்த்தபோது, அந்நிறுவனத்தின்,  கணக்குகளில் பல்வேறு குளறுபடிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன.

ஊழலற்றதா பாஜக அரசு? – மோசடியாக பரப்பப்படும் கருத்து

இதையடுத்து, பிரான்ஸ் நாட்டின் புலனாய்வு பத்திரிகையான மீடியாபார்ட், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சைகளை மூன்று பகுதிகளைக் கொண்ட தொடராக வெளியிடுவதாக அறிவித்திருந்தது. அதன்படி, நேற்றைய தினம், அதன் முதல் பாகம் வெளியிடப்பட்டது. அதில், ”ரஃபேல் போர் விமானத்தைப் பெறுவதற்கான சர்ச்சைக்குரிய ஒப்பந்தத்தை நிறைவேற்றியது மட்டுமல்லாமல், இந்தியாவைச் சேர்ந்த இடைத்தரகர் ஒருவருக்கு 8.62 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின அணிவகுப்பில் ராமர் கோவிலுக்கு முதல் பரிசு – பாதுகாப்புத்துறை அறிவிப்பு

மேலும், கடந்த 2017 ஆம் ஆண்டு, தசால்ட் நிறுவனத்தின் கணக்குகளை, பிரான்ஸ் நாட்டின் ஊழல் தடுப்பு பிரிவு சரி பார்த்தபோது, சுமார் 4 கோடி ரூபாய்க்கும் மேல் வாடிக்கையாளர்களுக்குப் பரிசுப் பொருட்கள் வாங்கி கொடுப்பதில் செலவு செய்திருப்பதாகத் தெரிவித்திருந்தனர்.

இந்திய போர்க்கப்பல்: பெண் அதிகாரிகள் முதன்முறையாக நியமனம்

வாடிக்கையாளர்களுக்குப் பரிசுப் பொருட்கள் தருவது, விருந்தளிப்பது போன்றவை ஊழல் நடந்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பதை சுட்டிக்காட்டுவதாக ஊழல் தடுப்பு பிரிவு கூறியிருந்தது.

போர்ட்டோ ரிகாவின் தேர்தல் அரசியலில் இடதுசாரிகள் பொருந்தியது எப்படி?

”ஒரு இந்திய நிறுவனத்திற்கு ஏன் இத்தகைய விலையில் ஒரு ஒப்பந்தம் நடத்தப்பட்ட்டது. செலவு செய்யப்பட்ட பணம் ஏன் “வாடிக்கையாளருக்குப் பரிசு” என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது, விமானத்தின் ஏதேனும் மாதிரிகள் எப்போதாவது செய்யப்பட்டனவா?” என்ற கேள்விகள் தசால்ட் நிறுவனத்தினடம்  முன்வைக்கப்பட்டதாக மீடியாபார்ட்டின் செய்தி கூறுகிறது.

மேலும் “தசால்ட் குழு ரஃபேல் போர் விமான மாதிரிகளை ஏன் செய்யவில்லை. ஏன் அது தொடர்பான ஒரு புகைப்படம் கூட இல்லை. இந்தக் கொள்முதல் “போலியானது” மற்றும் “நிதி பரிவர்த்தனைகளை” மறைக்கும் நோக்கம் கொண்டது என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளதாக மீடியாபார்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த் விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் கடுமையானான கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்